Sunday, December 09, 2007

Star23. சச்சினின் Nervous Nineties Jinx

எனது மற்ற நட்சத்திர வாரப்பதிவுகளை இங்கு சென்று வாசிக்கவும்


நமது லிட்டில் மாஸ்டருக்கு, இவ்வருடம் என்ன ஆனதென்று புரியவில்லை! இவ்வருடம் ஆடிய பல இன்னிங்க்ஸ்-களில், தொண்ணூறு ஓட்டங்கள் எடுக்கும் வரை, திறமையாக, சிறப்பாக பந்து வீச்சை எதிர் கொள்பவரை (அவர் தொண்ணூறை எட்டியவுடன்) ஒரு வித அச்சமும், நம்பிக்கையின்மையும் ஆட்கொள்வது யாருக்கும் புரியாத புதிராக உள்ளது!

இந்த வருடம் மட்டும் 7 (டெஸ்டில் ஒரு தடவை, ஒரு நாள் ஆட்டங்களில் 6 தடவை) முறை, தொண்ணூறுகளில் தன் விக்கெட்டை பறி கொடுத்திருக்கிறார். அவற்றில் மூன்று தடவை (முறையே, தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக) 99 ரன்களில் அவுட்!

எனக்கென்னவோ, சச்சின் தொண்ணூறை எட்டியவுடன், தன்னுடைய நார்மல் ஆட்டத்தைத் தொடராமல், நூறை எட்ட வேண்டுமே என்பதில் அதிக கவனத்தைச் செலுத்துவதும், தேவையில்லாத ஷாட்களை தேர்ந்தெடுப்பதும் தான், அவரின் இந்த "தொண்ணூறுகளில்" வீழ்ச்சிக்குக் காரணமாகத் தோன்றுகிறது. இதனால், பார்க்கும் நமக்கும் டென்ஷன் ஏறுவதற்குக் காரணமாகிறார் சச்சின் :)

தெண்டுல்கரின் ஒரு நாள் தொண்ணூறு ஸ்கோர்களின் பட்டியல்:

90 2 stumped 2 L World Cup 19 v Aus in Ind 1995/96 at Mumbai (d/n) [1065]
91 4 stumped 2 * L ChT (UAE) 1 v Eng in UAE 1997/98 at Sharjah (d/n) [1259]
95 2 bowled 2 W SJI Cup F1 v Pak in BD 1997/98 at Dhaka [1276]
93 1 bowled 2 * L C&U Ser. 7 v Pak in Aus 1999/00 at Hobart [1543]
93 2 caught 2 L 5th ODI v SA in Ind 1999/00 at Nagpur [1576]
93 2 caught 2 L Asia Cup 3 v SL in BD 2000 at Dhaka (d/n) [1598]
98 1 caught 2 W World Cup 36 v Pak in SA 2002/03 at Centurion [1975]
97 1 caught wk 1 W World Cup 46 v SL in SA 2002/03 at Johannesburg [1985]
93 2 caught wk 1 W 1st ODI v SL in Ind 2005/06 at Nagpur [2286]
95 2 caught 2 W 3rd ODI v Pak in Pak 2005/06 at Lahore (d/n) [2329]
99 2 run out 1 L Future 1 v SA in Ire 2007 at Belfast [2592]
93 2 bowled 2 W Future 2 v SA in Ire 2007 at Belfast [2593]
99 2 caught wk 1 W NW Series 2 v Eng in Eng 2007 at Bristol (d/n) [2613]
94 2 caught 2 W NW Series 6 v Eng in Eng 2007 at The Oval [2619]
99 2 caught wk 1 L 2nd ODI v Pak in Ind 2007/08 at Mohali (d/n) [2644]
97 2 bowled 2 W 4th ODI v Pak in Ind 2007/08 at Gwalior (d/n) [2646]

சச்சின் மொத்தம் 78 சதங்கள் (டெஸ்ட் - 37, ஒரு நாள் பந்தயம் - 41) குவித்திருப்பது நாம் அறிந்ததே! அவர், தனது கிரிக்கெட் வாழ்க்கையில் தவற விட்ட (அதாவது, தொண்ணூறுகளில் அவுட் ஆனதால்) 22 சதங்களை (டெஸ்ட் - 6, ஒரு நாள் பந்தயம் - 16) கணக்கில் கொண்டால், அவர் இந்நேரம், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 100 சதங்கள் அடித்த சாதனையாளர் ஆகி இருப்பார்!!! என்ன செய்வது, விதி வலியது :)

எனது மற்ற நட்சத்திர வாரப்பதிவுகளை இங்கு சென்று வாசிக்கவும்

என்றென்றும் அன்புடன்
பாலா

2 மறுமொழிகள்:

Sridhar V said...

அவர் தான் விளையாடிய முதல் 79 பந்தயங்களில் சதமே அடிக்கவில்லை.

பின்னரும் அவர் இரட்டை சதம் அடிக்கவில்லை, அவர் நீண்ட இன்னிங்க்சை ஆடுவத்ல்லை என்று விமர்சனம்.

அவர் அதிக ரன்களை குவித்தாலும் அணியின் வெற்றிக்கு அது பயனளிப்பதில்லை என்று விமர்சனம்.

அவர் அடித்து ஆடுவதில்லை. மென்மையாகிவிட்டார் என்று விமர்சனம்.

தற்பொழுது இந்த nervous nineties குற்றசாட்டு. 90 ரன்கள் தொடர்ந்து எடுத்திருக்கிறாரே என்று யாரும் சந்தோஷப் படாமல் அதிலும் நாம் குற்றம் கண்டுபிடிக்க தலைப்படுவது அவர் மேல் ரசிகர்கள் வைத்திருக்கும் அதீத எதிர்பார்ப்புதான்.

ஆனால் அவர் தொடர்ந்து தனது மட்டையால் எல்லாவற்றையும் தாண்டி போய் கொண்டேதானிருக்கிறார்.

என்னை மிகவும் கவர்ந்த அம்சம் - He is amazingly polite inspite of all criticisms.

enRenRum-anbudan.BALA said...

sridhar venkat,
கருத்துக்கு நன்றி.

சச்சின் ஒரு அபாரமான ஆட்டக்காரர் (genius) என்பதில் எந்த ஐயமும் இல்லை !

அவர் சமீபத்தில் 90-க்களில் விக்கெட் இழப்பதை சுட்டிக் காட்டினேன் ! குற்றம் எல்லாம் சொல்ல வரவில்லை :)

நான் ரொம்ப நாளா சச்சின் ரசிகன் தான் !

எ.அ.பாலா

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails